உங்கள் சொத்து சம்பந்தமான வழக்குகள் வெகுநாட்களாக இழுபறியில் இருந்து கொண்டிருக்கிறதா?

#spiritual
உங்கள் சொத்து சம்பந்தமான வழக்குகள் வெகுநாட்களாக இழுபறியில் இருந்து கொண்டிருக்கிறதா?

வராஹி அம்மன் என்பவள் மஹா காளியின் அம்சமானவள். வராஹி அம்மனை வணங்குபவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை என்றும் சொல்லலாம். தன் பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்க அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தாயாகவும், கருணை கடலாகவும் திகழ்பவள் வராஹி அம்மன்.

வராஹி அம்மன் மந்திரத்தை சொல்லி அவரை மனதார பூஜித்து வழிபாடுகள் செய்வதன் மூலம் தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் தடை இல்லாமல் நடந்து முடியும். வெகு நாட்களாக இழுபறியாக இருக்கும் வழக்குகளும், சொத்துப் பிரச்சினைகளும் உடனே முடிவுக்கு வரும். தொழிலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் தெளிவான முடிவு கிடைக்கும். வாருங்கள் வராஹி அம்மனுக்கு செய்ய வேண்டிய பூஜையையும், சக்தி வாய்ந்த மந்திரத்தையும் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக உருவெடுத்தவள் வராஹி. பெண்ணின் உடல் அமைப்புடன் பன்றி முகத்தைக் கொண்டவர் வராஹி அம்மன். கருப்பு நிற ஆடை உடுத்தி, நான்கு கரங்களைக் கொண்ட இந்த அம்மன், இரண்டு கரங்களில் கலப்பையையும், தண்டத்தினையும் வைத்துக்கொண்டு சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பார். ராஜராஜசோழன் வணங்கிய தெய்வம் வராஹியம்மன்.

சோழர்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் வராஹி அம்மனை வணங்கிய பிறகே தொடங்குவார்கள். போருக்கு செல்வதற்கு முன்னும் வராகி அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு தான் சொல்வார்கள். அதனால் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார்கள். எனவே வராஹி அம்மன் சோழர்களின் வெற்றி தேவதையாக வணங்கப்பட்டாள்.

ஒருமுறை சோழ மன்னன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்காக இடத்தை தேடி அலைந்த பொழுது எந்த இடமும் சரியாக அமையவில்லை. ஒருமுறை அவர் தனது தேரில் சென்று கொண்டிருக்கும்போது பன்றி ஒன்று அவரது முன் நின்று அவருக்கு போக்கு காட்டியது. அதனை அவர் துரத்தி சென்ற போது அது அவருக்கு முன் நின்று பூமியைக் காலால் அழுத்தி, தனது மூக்கை பயன்படுத்தி மண்ணைத் தோண்டியது.

சோழ மன்னன் இதனை ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை கேட்டார். ஜோதிடரோ வராஹியம்மன் கோவில் கட்டுவதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்று கூறினார். உடனே சோழ மன்னனும் முதலில் அந்த இடத்தில் வெற்றி தேவதையான வராஹி அம்மனுக்கு ஒரு சிறிய கோவிலைக் கட்டிவிட்டு, பின்னர் அவர் நினைத்தபடி உலகம் போற்றும் பெரிய கோவிலான தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்தார். இங்கு எந்த கோவிலிலும் இல்லாத விசேஷம் ஒன்று உள்ளது.

எங்கும் எப்பொழுதும் விநாயகருக்கு தான் முதலில் பூஜை செய்வார்கள். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் இன்று வரை வராஹி அம்மனுக்கே முதல் பூஜை செய்வார்கள்.
அவ்வாறு எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கு வெற்றியை தருகிற வராஹி அம்மனின் மந்திரத்தை சொல்லி பூஜை செய்வதன் மூலம் முடிக்க முடியாத எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். வராஹி மூல மந்திரம்: “ஓம் கிளீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபணி ஸ்ரீம் தன வசங்கிரி தனம் வர்ஷா ஸ்வாக”

பூஜை செய்யும் முறை: வரஹி அம்மன் சிலை அல்லது திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, மலர் சூட்டி, தீபம் ஏற்றி, வெள்ளை மொச்சை பயிரை வேக வைத்து, அதை தேன் மற்றும் நெய்யுடன் கலந்து, வராஹி அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து, பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு முழு மனதுடன் இறை நம்பிக்கையுடன் வராஹி அம்மனை பூஜை செய்ய நாம் நினைத்த காரியம் எதுவாக இருந்தாலும் அதற்கான தடைகள் விலகி அந்த காரியம் விரைவில் நடைபெறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4