யுகதனவி மின்நிலைய உடன்படிக்கை : சட்ட மாஅதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை

Reha
4 years ago
யுகதனவி மின்நிலைய உடன்படிக்கை : சட்ட மாஅதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராயுமாறு, சட்ட மாஅதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை புவனேக்க அலுவிஹாரே, A.H.M.D.நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிஷ்டர் ஜெனரல் பர்ஷானா ஜமீல் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணை என மேலதிக சொலிஷ்டர் ஜெனரல் இதன்போது கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4