கனடாவுக்கு கடல்வழியாக செல்ல முயற்சித்த 19 பேர் கைது

Nila
4 years ago
கனடாவுக்கு கடல்வழியாக செல்ல முயற்சித்த 19 பேர்  கைது

கனடாவுக்கு சட்டவிரோதமாக கடல்வழியாக ஆட்களை கடத்த முயற்சித்த பிரதான கடத்தல்காரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். 

சிலாபம் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

 சிலாபம் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் கடந்த 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் சிலாபம் தெதுரு ஓயா முகத்துவாரத்திலிருந்து கனடாக நோக்கி புறப்படுகையில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், கடத்தல்காரர் கனடாவுக்குச் செல்வதாக உறுதியளித்து ஒவ்வொரு நபர்களிடம் இருந்தும் 3 முதல் 3.5 மில்லியன் ரூபா வரை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4