பாணுக்குள் நத்தை! சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு

Reha
4 years ago
பாணுக்குள் நத்தை! சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு

வெதுப்பக உணவு உற்பத்திகளை விநியோகிக்கும் நடமாடும் ஓட்டோவில் விற்பனை செய்யப்பட்ட பாணுக்குள் நத்தை காணப்பட்ட சம்பவம் இங்கிரிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்தப் பாணை வாங்கிய நபர் இது குறித்து ஓட்டோவில் வந்த விற்பனையாளர் மற்றும் வெதுப்பக உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும், பாணுக்குள் நத்தை இருந்தமைக்குத் தாம் எதனையும் செய்ய முடியாது என அவர்கள் பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து பாணை வாங்கிய நபர், குறித்த சம்பவம் குறித்து இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4