அதிக வேகம் காரணமாக இடம்பெற்ற பாரிய விபத்து

Prasu
4 years ago
அதிக வேகம் காரணமாக இடம்பெற்ற பாரிய விபத்து

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று இரவு (12) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கர வண்டியொன்று, முன்னால் சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதுடன், குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றதையடுத்து, அங்கு இரண்டு முச்சக்கர வண்டிகளின் தரப்பினர்கள் ஒன்று கூடியமையால் அங்கு சில நிமிடங்கள் பதற்ற நிலை காணப்பட்டது.

எனினும், புத்தளம் போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததையடுத்து, நிலமை சுமூகமானதுடன் ஆங்காங்கே கூடிநின்றவர்கள் களைந்து சென்றனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4