கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்தது டிப்பர்

#SriLanka #Kilinochchi
கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்தது டிப்பர்

ஏ-9 வீதியூடாகப் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து புடைவை வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் இன்று மாலை கிளிநொச்சி நகர் பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கடையில் இருந்த பெறுமதியான பொருள்கள் சேதமடைந்தன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4