பிரதமரை நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசிய சுமந்திரன்

Prabha Praneetha
4 years ago
பிரதமரை நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசிய சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் அமர்வுக்கு வருகைதந்திருந்தனர். இதன்போது மதிய போசன இடைவேளை நேரத்திலேயே சந்தித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அரசாங்கத்தை காப்பாற்றவே அவர்கள் அமெரிக்கா செல்லவுள்ளதாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து உரையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4