இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் புளூமெண்டல் சங்காவின் கூட்டாளி கைது!

#Arrest #Police
Prathees
4 years ago
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் புளூமெண்டல் சங்காவின் கூட்டாளி கைது!

மஹரகம, பன்னிபிட்டியவில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்க ஷிராந்த என்ற புளூமெண்டல் சங்காவின் கூட்டாளி யே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் புளூமெண்டல் சங்காவின் நெருங்கிய கூட்டாளியான தொட்டலக சானா என்பது தெரியவந்துள்ளது.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர், வெளிநாடு செல்வதற்கு முன்னர், சந்தேக நபரிடம் துப்பாக்கியை கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4