நெதர்லாந்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிப்பு!

#Curfew
Keerthi
4 years ago
நெதர்லாந்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிப்பு!

கொவிட்-19 தொற்றுகளின் விரைவான எழுச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், உணவகங்கள் மற்றும் கடைகளை முன்கூட்டியே மூடவும் மற்றும் பார்வையாளர்களை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து தடைசெய்யவும் நெதர்லாந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் நெதர்லாந்து முடக்க நிலைக்குள் இருக்கும். கட்டுப்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும்.

இதற்கான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மார்க் ரூட் வெளியிட்டார்.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்களும் முன்பே மூடப்படும்.

சமூக தொலைதூர நடவடிக்கைகள் மீண்டும் விதிக்கப்படும். நான்கு பார்வையாளர்களுக்கு மேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று அரசாங்கம் பரிந்துரைத்தது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வருகிறன.

அருந்தகங்கள் மற்றும் இரவு விடுதிகள் இன்று (சனிக்கிழமை) முதல் இரவு 8 மணிக்கு மூடப்படும்.

அதேசமயம் பாடசாலைகள் மற்றும் திரையரங்குகளுக்கு பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 21ஆவது நாடாக விளங்கும் நெதர்லாந்தில், 2,269,235பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18,695பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4