பிரான்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

#Covid 19
Keerthi
4 years ago
பிரான்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக 70இலட்சத்து இரண்டாயிரத்து 790பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை 72இலட்சத்து 60ஆயிரத்து 503பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 121பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 860பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 48பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 39ஆயிரத்து 592பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 49பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4