விக்டோரியா நீர்த்தேக்கத்தை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்த மூவர் கைது

#Arrest
Prathees
4 years ago
விக்டோரியா நீர்த்தேக்கத்தை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்த மூவர் கைது

உரிய அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) பறக்கவிட்டு பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த மூவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (13) காலை விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது படையணி இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவு முகாம் ஆகிய இடங்களில் உரிய அனுமதியின்றி ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.

இவர்கள் கொதடுவ மற்றும் களனி பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்பதுடன் இன்று (14) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4