கணவரின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்த மனைவி: சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

#Police
Prathees
4 years ago
கணவரின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்த மனைவி: சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்களை அழைத்து கோழி இறைச்சி மற்றும் காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்த மனைவியால்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கணவரின் தொழில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த மனைவியின் நடவடிக்கையால் பண்டாரவளைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் களப்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சகரின் மனைவிஇ பண்டாரவளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு  தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாட்டுக் கோழி இறைச்சி, பண்டாரவளை உருளைக்கிழங்கு, உயர்தர மரக்கறி மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும்படி தெரிவித்துள்ளார்.

இது நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் இதன்காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் குறித்த வேலையை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அவ்வாறு செய்யக் கூடாது என்ற தனது உத்தரவை மீறி கணவனை வற்புறுத்தவும் முயற்சி செய்துள்ளார்.

இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் பண்டாரவளை காவல்நிலையத்தில் சுமார் 10 காவல் நிலையங்கள் உள்ளன.  அந்தந்த காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அவரது மனைவியின் கைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த பொலிஸ் அத்தியட்சகர்இ சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4