7 மணி நேர வாக்கு மூலம்: சிஐடியிலிருந்து  வௌியேறினார் அருட்தந்தை

#Investigation
Prathees
4 years ago
7 மணி நேர வாக்கு மூலம்: சிஐடியிலிருந்து  வௌியேறினார் அருட்தந்தை

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ 7 மணி நேர வாக்கு மூலம் ஒன்றை வழங்கிய பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகமாறு விடுக்கப்பட்ட அழைப்பு அடுத்து, அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று (15) காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்து சம்பந்தமாக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,  நாளை மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராக வேண்டுமென தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4