இன்றைய வேத வசனம் 16.11.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 16.11.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

அப்பொழுது இயேசு... “பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்றார்.  லூக்கா 5:10

ஒரு மனிதன் முதலில் ஒரு பொருட்கள் சேகரிக்கும் பெட்டியை கையிலெடுத்தார். அவருடைய ஊரில் இருந்த ஒரு மீன் தூண்டில் கடையில், தூண்டில் கொக்கிகள், ஈர்ப்புகள், தக்கைகள் மற்றும் எடைகளுடன் தன்னுடைய வணிகக் கூடையை நிரப்பினார்.

அத்துடன் ஒரு முழுமையான தூண்டிலோடு கூட குச்சியையும் சுற்றும் குழலையும் தேர்ந்தெடுத்தார். இதற்கு முன்பாக மீன் பிடித்ததுண்டா? என்று கடைக்காரர் அவரிடம் கேட்டார். அவர் இல்லை என்று பதிலளித்தார். “இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று அந்த கடைக்காரர் முதலுதவிப் பெட்டியை நீட்டினார்.

அதை ஒத்துக்கொண்டு அதற்கான விலையைக் கொடுத்து விடைபெற்ற அந்த மனிதர், மாலையில் கொக்கிகளினாலும், கயிற்றினாலும் கைகளில் ஏற்பட்ட காயங்களுடன் ஒரு மீன் கூட பிடிக்காமல் திரும்பினார்.    

அந்த பிரச்சனை சீமோன் பேதுருவுக்கு இல்லை. அவன் ஒரு திறமையான மீன்பிடிக்கும் நபர். அவனைப் பார்த்து இயேசு, “ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொல்லும்போது அவன் ஆச்சரியப்படுகிறான் (லூக்கா 5:4). இரா முழுதும் தேடியும் ஒரு மீனும் அகப்படாத நிலையில் சீமோனும் அவனுடைய குழுவினரும் “தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்” (வச. 6). “இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்” (வச. 7).

அதைப் பார்த்த சீமோன் பேதுரு, “இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்” (வச. 8). இயேசு சீமோனின் உண்மையான அங்கீகாரத்தை அறிந்திருந்தார்.

தன்னுடைய சீஷனைப் பார்த்து, “இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்று சொன்னார். அதைக் கேட்டமாத்திரத்தில் சீமோன், “எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றான்” (வச. 10-11). நாமும் அவரைப் பின்பற்றும்போது, நம்மை யார் என்பதையும், நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு விளங்கச்செய்வார்.