புரதம் மிகுந்த அவித்த மீன் கறி செய்வது எப்படி?
#Cooking
#Fisherman
Mugunthan Mugunthan
3 years ago

தேவையானவை:
- மீன் -2,
- மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
- எலுமிச்சைப்பழம் - ஒன்று,
- இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,
- உப்பு - தேவையான அளவு,
- மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
- தயிர் - ஒரு கப்
- வாழையிலை - ஒன்று.
செய்முறை:
- முதலில் மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்சைப் பழச்சாறு, மிளகுத்தூள் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
- சுத்தம் செய்த மீன்களை, இந்தக் கலவையில் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு, அந்த மீனை எடுத்து வாழையிலை யில் வைத்து மடித்து, இட்லிப் பாத்திரத்தில் வைத்து மூடி அடுப்பை 25 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.
- அவித்த மீன் ரெடி. கொழுப்புச்சத்து குறைவாகவும் புரதம் மிகுதியாகவும் உள்ள நல்ல உணவு இது.



