கடந்த 24 மணித்தியாலயத்தில்  5 விபத்துக்கள்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐவர் பலி

#Accident #Death
Prathees
4 years ago
கடந்த 24 மணித்தியாலயத்தில்  5 விபத்துக்கள்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐவர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற ஐந்து வீதி விபத்துக்களில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் ஒபடகஹதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மித்தெனியவில் இருந்து வலஸ்முல்லை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 56 வயதான பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளைஇ பன்னல - மெல்லவகெதர வீதியில் பொல்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 84 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்று அந்த திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – பொல்கஹவெல வீதியின் மொருகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த காரின் சாரதி மற்றுமொரு வாகனத்தை முந்திச் சென்ற போது வீதியை விட்டு விலகி அருகில் இருந்த இரண்டு கடைகளில் மோதி விபத்துக்குள்ளானது.

அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் பள்ளிக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை எம்பிலிப்பிட்டிய நோனாகம வீதியில் வெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இருந்து நோனாகம நோக்கி பயணித்த லொறியொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4