அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்கிய அமைச்சர் நாமல்

#Namal Rajapaksha
Prathees
4 years ago
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்கிய அமைச்சர் நாமல்

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (17) கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதியை பார்வையிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ ரம்புக்கனை தேர்தல் தொகுதியில் அனர்த்தங்களினால் முற்றாக பாதிக்கப்பட்ட 49 குடும்பங்களுக்கு எடெல்ல தோட்டத்தில் காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கும்இ அந்த காணிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு 1.2 மில்லியன் ரூபா வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ வசிப்பவர்களுக்கு 15000 ரூபா பெறுமதியான சமையல் பாத்திரங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் அமைச்சர் வழங்கி வைத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4