திருமதி பாக்கியம் சங்கரப்பிள்ளை

Reha
3 years ago
திருமதி பாக்கியம் சங்கரப்பிள்ளை

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், திருகோணமலையைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சங்கரப்பிள்ளை அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணன் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(B.SC- Hons, Dip- in Edu, ஓய்வுபெற்ற ஆசிரியர், முன்னாள் திட்ட இணைப்பாளர்- சர்வோதயம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்- திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

ஹேமலதா மகேஸ்வர்(BSC- முன்னாள் ஆசிரியை, தி/சண்முகா இந்து மகளிர் கல்லூரி - கனடா), காலஞ்சென்றவர்களான ஸ்வர்ணலதா(B.A. Dip- in Edu, English Trained, முன்னாள் ஆசிரியை, யா/கொக்குவில் இந்துக் கல்லூரி), கீதாஞ்சலி(B.A English Trained, முன்னாள் ஆசிரியை, யா/கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம்) மற்றும் மீரா(இலங்கை புகையிரதத் திணைக்களம்), வாணி சுரேஸ்குமார்(முன்னாள் ஆசிரியை, தி/ஆலங்கேணி விநாயகர் ம.வி- இந்தியா), பாலமுரளி(லண்டன், முன்னாள் முகாமைத்துவ உதவியாளர், வடமாகாண சபை மற்றும் இந்து கலாச்சார அமைச்சு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வர்(கனடா), சுரேஸ்குமார்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜனனி, பிரதீப், ரிஷி, ஒவியா, இலக்கியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்களான இராசையா(ஓய்வுபெற்ற உதவிப் போக்குவரத்து அத்தியட்சகர், புகையிரதத் திணைக்களம்), பூவிலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் இராசரத்தினம், சிவஞானம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்- இ.போ.சபை), பரமேஸ்வரி அன்ரனி(ஓய்வுநிலை உப அதிபர்), பரமானந்தம்(பிரான்ஸ்), பாலச்சந்திரா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரிபூரணம், காலஞ்சென்ற மரியமுத்து, சுசீலாதேவி, பரமேஸ்வரி, பி.ஜே.அன்ரனி, புவனேஸ்வரி, பவானி, காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவபாக்கியம்(கனடா), காலஞ்சென்ற சின்னமணி, ஜெயலட்சுமி, ஜீவரட்ணம், மல்லிகா(ஓய்வுபெற்ற ஆசிரியை), தவகுலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோன்மணி, காலஞ்சென்ற இராசரத்தினம், மாணிக்கம், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, பாக்கியராசா மற்றும் புவனேஸ்வரி உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பாலமுரளி +94775179106

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!