ராகுல் காந்தியை நாடாளுமன்ற பதவியில் இருந்து நீக்க பாஜக கோரிக்கை

#India #Parliament #Minister #Rahul_Gandhi
Prasu
4 months ago
ராகுல் காந்தியை நாடாளுமன்ற பதவியில் இருந்து நீக்க பாஜக கோரிக்கை

ராகுல் காந்தியை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்‌ என்றும் அவர் மீண்டும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் துபே, ‘‘இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஜார்ஜ் சோரஸ் போன்ற சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ராகுல் காந்தி எவ்வாறு நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது குறித்து மக்களவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளேன்.

அந்த தீர்மானத்தில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4