பேரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி : மூவர் படுகாயம்

#Accident #Batticaloa
Prathees
4 years ago
பேரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி : மூவர் படுகாயம்

மட்டக்களப்பு - சித்தாண்டியில் பேரூந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பேரூந்துடன் சந்திவெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4