100 வருடங்கள் பழமையான மரத்தை வெட்டிய நபருக்கு நேர்ந்த கதி

#Police #Arrest #Trincomalee
Prathees
4 years ago
100 வருடங்கள் பழமையான மரத்தை வெட்டிய நபருக்கு நேர்ந்த கதி

சுமார் 100 வருடங்கள் பழமையான மரத்தின் கிளையை வெட்டிய நபரை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோணேஸ்வரம் கோவில் பிரதேச தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டிலே நபர் ஒருவரைக் கைது செய்ததாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் எடுத்துச் சென்றனர்.

100 வருடங்கள் பழமையானது என்பதுடன் மரத்தின் ஒரு கிளையானது முறிந்து விழுந்ததில் வீதியோர நடை பாதை வியாபாரத்திற்கு அபாயகரமானதாக காணப்பட்டதில் கடை உரிமையாளரினால் தொல்பொருள் திணைக்கள அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டு அவரின் உத்தரவு பெயரில் அப்புறப்படுத்தியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

எனினும் உரிய தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடமிருந்து மரம் தரிப்பதற்கான ஆவணங்கள் வழங்கப்படாது இருந்த காரணத்தினால் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.

இது சம்பந்தமான தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவிக்கையில்,

குறித்த நபர் மரம் வெட்டுவதற்கான ஆவணங்கள் வழங்கும் முன் மரத்தினை வெட்டியதாகவும் ஆவணங்களை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறித்த மரம் மட்டுமே அகற்ற தாம் அனுமதி அளித்ததாகவும் மேலதிக மரங்கள் வெட்டப்பட்டிருந்தால் கடை உரிமையாளருக்கு எதிராக தாம் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4