பளை பொலிஸ் நிலையத்தில் 11 பேருக்கு கோவிட் 

#Kilinochchi #Police #Covid 19
Prathees
4 years ago
பளை பொலிஸ் நிலையத்தில் 11 பேருக்கு கோவிட் 

கிளிநொச்சி பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பளை பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் 11 காவல்துறை அதிகாரிகளுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்இ சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நண்பர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் சுகாதாரமான முறையில் பொது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4