முல்லைத்தீவில் வீதியால் சென்ற சிறுமியை இழுத்துச் சென்ற 17 வயது சிறுவன் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
முல்லைத்தீவில் வீதியால் சென்ற சிறுமியை இழுத்துச் சென்ற 17 வயது சிறுவன் கைது

வீதியால் சென்ற ஆறு வயதான சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் இழுத்து சென்ற 17 வயதான இளைஞன் ஒருவரை  இன்று கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

தீர்த்தக்கரை அன்னைவேளாங்கன்னி ஆலயத்துக்கு அருகிலேயே  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 குறித்த  சிறுமி கடைக்குச் சென்று திரும்பியவேளை,  கூப்பிட்டு வாயைப்  பொத்தி  அருகிலுள்ள பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றுள்ளார். 

இந்நிலையில், கையை தட்டிவிட்டு ஓடிவெளியே வந்த சிறுமி, சத்தமிட்டுள்ளார். அதன்பின்னர் அயலவர்கள் ஓடிவந்து காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 17 வயதான இளைஞனை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4