பிரித்தானியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றும் உயிரிழப்புக்களும்

Prasu
4 years ago
பிரித்தானியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றும் உயிரிழப்புக்களும்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 38ஆயிரத்து 263பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 201பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 96இலட்சத்து 75ஆயிரத்து 058பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 43ஆயிரத்து 360பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 87ஆயிரத்து 711பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 938பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 79இலட்சத்து 43ஆயிரத்து 987பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4