பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பான விசேட சுகாதார வழிகாட்டி வெளியானது

Reha
4 years ago
பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பான விசேட சுகாதார வழிகாட்டி வெளியானது

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

பாடசாலை மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில், செயற்படும் விதம் தொடர்பிலும் புதிய சுகாதார வழிகாட்டியில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், கொவிட் கொத்தணிகள் உருவாகும் என அச்சம் காணப்படுகின்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4