சபுகஸ்கந்த மூடப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்திற்கு 100 மில்லியன் ரூபா செலவு

#SriLanka
Prathees
4 years ago
சபுகஸ்கந்த மூடப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்திற்கு 100 மில்லியன் ரூபா  செலவு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் 1300 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மாதாந்தம் சம்பளமாக 100 மில்லியன் ரூபா செலவாகும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சுத்திகரிப்பு நிலையம் இயங்கினால், வருவாயில் ஒரு பகுதி ஊழியர்களின் சம்பளத்திற்காக ஒதுக்கப்படும். எவ்வாறாயினும், சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் மேலதிகமாக 100 மில்லியன் ரூபா செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால், வருமானம் இன்மை மற்றும் சம்பளத்திற்காக பணம் செலவழிக்கப்படுவதால் நெருக்கடி ஏற்படலாம் என சுத்திகரிப்பு நிலையத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4