அதிபர் பிறப்பித்த உத்தரவு: மாணவன் தற்கெலைக்கு முயற்சி

#Student
Prathees
4 years ago
அதிபர் பிறப்பித்த உத்தரவு: மாணவன் தற்கெலைக்கு முயற்சி

அதிபர் பிறப்பித்த உத்தரவு காரணமாக பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பேராதனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக  விசாரிக்க குறித்த மாணவனிடம் பெற்றோரை அழைத்து வருமாறு பாடசாலை அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அச்சமடைந்த குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

15 வயதுடைய மாணவன் தற்போது பேராதனை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி மாணவன் தற்கொலைக்கு முயன்றதை பார்த்த அவரது சகோதரி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4