மாணிக்ககல் அகழ்வில் சிக்கிய மூவர் கைது

Prabha Praneetha
4 years ago
மாணிக்ககல் அகழ்வில்  சிக்கிய மூவர் கைது

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டியன்சின் கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம், மின்சாரத்திற்கு தேவையான வயர் சுருள்கள் மற்றும் நீர் வெளியேற்றும் குழாய்கள் என்பன கைபற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் பொகவந்தலாவ டியன்சின், பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவ கெம்பியன் ஆகிய தோட்டப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4