கார்த்திகை மாதம் இந்த ஹோமத்தை செய்தால் பொன் பொருள் சேரும்.

#spiritual
கார்த்திகை மாதம் இந்த ஹோமத்தை செய்தால் பொன் பொருள் சேரும்.

ஒரு சில மாதங்கள் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கும் அப்படி புரட்டாசி மாதம் பெருமாளுக்கும், ஆடி மாதம் அம்பாளுக்கும் என பல பூஜைகள் செய்யப்படும் மாதமாக இருக்கின்றன. ஆனால் இந்த கார்த்திகை மாதம் மட்டும் தான் பலதரப்பட்ட கடவுள்களுக்கும் விசேஷமானதாக அமைகிறது. இந்த மாதம் கந்தனுக்கு உரிய மாதமாக தான் பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மட்டும் காரணமல்ல.

இதைத் தவிர பல தெய்வங்களும் இந்த மாதத்தில் சிறப்புமிக்க செயல்களை செய்கின்றனர். எனவே இந்த மாதம் மிகவும் ஒளிமயமான மாதமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் அனைவரது வீட்டிலும் தீபங்கள் ஏற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இப்படி இந்த மாதத்தில் இந்த விசேஷ ஹோமம் செய்வதன் மூலம் கிடைக்கப் போகும் பலன்கள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மிகவும் முக்கியமாக இந்த மாதம் சிவபெருமானை பூஜிக்க சிறந்ததாகவும் இருக்கிறது. இந்த மாதத்தில்தான் சிவபெருமான் திருபுராசுரன் என்ற அசுரனை வதம் செய்திருக்கிறார். அந்த நாளையே கார்த்திகை தீபமாக கொண்டாடுகிறோம். அதுமட்டுமல்லாமல் விஷ்ணு பகவான் தனது உறக்கத்தை கலைக்கும் மாதமும் கார்த்திகை மாதமாகும். அத்துடன் நரசிம்மரும் தனது மூன்றாவது கண்ணை திறக்கும் ஒரு மாதம் கார்த்திகை மாதமாகும். ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மாலை போடும் மாதமும் இந்த மாதத்தில்தான் துவங்குகிறது.

இத்தனை சிறப்பு மிக்க கார்த்திகை மாதம் அக்னியை போற்றும் மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் எந்த அளவிற்கு அக்னியை வணங்குகிறோமோ அந்த அளவிற்கு நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டே இருக்கும். வீட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்வு அமைந்திடும். பொன், பொருள் அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

இந்த மாதத்தில் விரதம் இருந்து தினமும் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. அதிலும் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் பெரும் பலனை அடைய முடியும். அவ்வாறு அசைவம், வெங்காயம், பூண்டு, கொண்டைக்கடலை, பாகற்காய், வெண்பூசணி போன்றவற்றை இந்த மாதத்தில் உணவில் சேர்ப்பதை தவிர்த்து வந்தால் நல்ல பலனை கொடுக்கும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4