இலங்கை தேசியக் கொடியை முகக் கவசமாக அணிந்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர்

Reha
4 years ago
இலங்கை தேசியக் கொடியை முகக் கவசமாக அணிந்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர்

இன்றைய தினம் நாட்டிற்கு வருகைத் தந்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கை தேசியக் கொடியுடனான முகக்கவசமொன்றை அணிந்திருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் மஹிந்த ராஜபக்ஸ கால்பந்து கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளும் நோக்கிலேயே அவர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர் கிஹானி இன்பென்டினோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும் கலந்துக்கொண்டிருந்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4