"மிலேனியம் சிட்டியில்" புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமான செயல் அல்ல - சரத் பொன்சேகா

Reha
4 years ago
"மிலேனியம் சிட்டியில்" புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமான செயல் அல்ல - சரத் பொன்சேகா

"மிலேனியம் சிட்டியில்" புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமான செயல் அல்ல எனவும் தாம் இராணுவ வீரனாக பிரகடனம் செய்வதாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் ஆயுதங்களை வைத்திருந்தமையானது இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் செய்த முறைகேடான நடவடிக்கை ஆகும். அந்த சம்பவத்தை ஒரு அரசாங்கத்தின் மீது சுமத்தி சேறுபூச ஆளும் கட்சியினர் எப்போதும் முயற்சித்து வந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஆழ ஊடுருவும் தாக்குதல்களை இராணுவத்தின் விசேட படைப் பிரிவினரே மேற்கொண்டனர்.

மிலேனியம் சிட்டி சம்பவம் நடந்த போது, நான் யாழ்ப்பாண பிராந்திய இராணுவ கட்டளை தளபதியாக இருந்தேன். இராணுவத்தினர் சிலரை பயன்படுத்தி அன்று அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுத்தனர் என  குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4