ஆண்மை நீக்கம் வேண்டாம் - பாகிஸ்தானின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு!

Prasu
4 years ago
ஆண்மை நீக்கம் வேண்டாம் - பாகிஸ்தானின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு!

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த நிலையில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி ஆண்மை நீக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆண்மை நீக்கம் செய்வது ஷரியத் சட்டங்களுக்கு எதிரானது என்றும், தூக்கில் போடும் தண்டனை வழங்குவதே சரி என்றும் அவை கண்டனம் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4