சுவீடனில் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை!

Keerthi
4 years ago
சுவீடனில் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை!

சுவீடனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி டிசம்பர் 1ஆம் திகதி முதல் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களைக் கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தங்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள மருத்துவம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் லீனா ஹாலன்கிரேன் வலியுறுத்தியுள்ளார்.

அறிகுறிகள் உள்ள அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை பொது சுகாதார நிறுவனம் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

நவம்பர் 1ஆம் திகதி முதல், தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு மட்டுமே சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மொத்தம் 7.29 மில்லியன் தனிநபர்கள் அல்லது 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85.3 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 81.7 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 35ஆவது நாடாக விளங்கும் சுவீடனில், 1,187,607பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 15,077பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4