களுசாகரவின் உதவியாளர் ஆயுதங்களுடன் கைது

#Arrest
Prathees
4 years ago
களுசாகரவின் உதவியாளர் ஆயுதங்களுடன் கைது

கொலை, கப்பம், ஹெரோயின் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பாதாள உலக உறுப்பினர் ஒருவரை தென் மாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலக தலைவர் 'களு சாகர'வின் கும்பலின் கொலைகாரன் என அறியப்படும் 41 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2004 இல் வீரகெட்டியவில் சுனில் மற்றும் தர்மே என்ற நபர்கள்  சுட்டுக் கொல்லப்பட்டமை, 2005 ஆம் ஆண்டு தம்பல கஜநாயக்க என்ற நபர் மற்றும் 2015 ஆம் ஆண்டு பள்ளிக்குடாவில் உக்குவா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக  சந:தேக நபர்  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் வாள் ஒன்றையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4