காரசாரமான கறுஞ்சுக்கா கோழி குழம்பு செய்வது எப்படி?

#Cooking
காரசாரமான கறுஞ்சுக்கா கோழி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை

  • கோழியிறைச்சி - ஒரு கிலோ,
  • நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
  • நீளமாக நறுக்கிய தக்காளி - 1,
  • நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 250 கிராம்,
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் இரண்டரை டீஸ்பூன்,
  • மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்,
  • தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
  • மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
  • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
  • கொத்த மல்லித்தழை - சிறிதளவு,
  • உப்பு தேவையான அளவு,
  • எலுமிச்சைப்பழம் - 1.

தாளிக்க:

  • எண்ணெய் - சிறிது,
  • கடுகு கால் டீஸ்பூன்,
  • உளுந்து கால் டீஸ்பூன்,
  • வற்றல் மிளகாய் - 1,
  • கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

  1. கோழியிறைச்சியைக் கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு, தேவையான‌ அளவு தண்ணீர், பெரிய‌ வெங்காயம், தக்காளி, எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு, 
  2. ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு தீயை அதிகப்படுத்தி ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்த‌வற்றைப் போட்டுத் தாளித்து, சின்ன வெங்காயத்தைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக சிவக்க வதக்கவும். 
  4. இதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து மீதம் இருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறி வேக வைத்த மட்டன் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.
  5. தீயை அதிகப்படுத்தி தேவையான அளவு உப்பு சேர்த்து மட்டனைச் சுருள வதக்கவும். 
  6. வதங்கியதும் மிளகுத்தூள், சீரகத்தூள், கொத்தமல்லித்தழை போட்டு கலந்து பரிமாறவும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!