பஸ் மோதி வயோதிபர் பரிதாப மரணம்!

Prabha Praneetha
4 years ago
பஸ் மோதி வயோதிபர் பரிதாப மரணம்!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வயோதிபர் ஒருவர் மீது மோதியதில் அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மாத்தளை, தம்புள்ளை பொலிஸ் பிரிவு ஹபரண வீதி, அவுடங்காவ பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து ஹபரண நோக்கிப் பயணித்த பஸ்ஸே, பாதசாரி மீது மோதியுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி அடுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது நபரே மரணமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4