நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை குறித்து சபாநாயகர் வருத்தம்

#Parliament #SriLanka
Prathees
4 years ago
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை குறித்து சபாநாயகர் வருத்தம்

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் மிகவும் வருந்தத்தக்கது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களை வெளிப்படுத்தும் அதிகாரம் மட்டுமே உள்ளது.அதனை தவறாக பயன்படுத்துவதை மன்னிக்க முடியாது எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற மரபுக்கு முரணான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை எந்த வகையிலும் வெளிப்படுத்தும் சுதந்திரம் முழுமையாக நாடாளுமன்றத்தின் எல்லைக்குள் இருப்பதால் இது ஒரு சோகமான நிலை. அவர்கள் எப்போதும் தேவையில்லாமல் நடந்துகொள்வது வருத்தமளிக்கிறதாக அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4