முச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயமாகும் நடைமுறை

Reha
4 years ago
 முச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயமாகும் நடைமுறை

நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்துக்காக ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

கண்டியில் நேற்று (20) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மூன்று மாதங்களில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சகல முச்சக்கரவண்டிகளிலும் இந்த கருவியை பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து கட்டண அளவீட்டு கருவி இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4