கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவரை காணவில்லை

#Police #Fisherman
Prathees
4 years ago
கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவரை காணவில்லை

காலி மாவட்டத்தில் மாகால்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற நபர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

மாகால்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்.

காலி துறைமுக பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4