IND VS NZ - நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Prasu
3 years ago
IND VS NZ - நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இஷான் கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த ரோகித் சர்மா, 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 103. 

வெங்கடேஷ் அய்யர் (20), ஸ்ரேயாஸ் அய்யர் (25), ஹர்ஷல் படேல் (18), அக்சர் பட்டேல் (2 ரன், அவுட் இல்லை), தீபக் சாகர் (21 ரன், அவுட் இல்லை) ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்க,  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7  விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக பின்கள வீரர்களின் அதிரடி ஆட்டம் ரசிகர்களிடையே ஆரவார வரவேற்பை பெற்றது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!