அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அழைப்பு 

#Investigation #Police
Prathees
4 years ago
அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அழைப்பு 

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று  காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த தகவல்களை வழங்குவதற்காக இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சகோ.சிறில் காமினி தெரிவித்த கருத்து தொடர்பில் தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சேலினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இது தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காக, சிறில் காமினி சி.ஐ.டி.க்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4