சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச - தனியார் துறையினருக்கு இடையில்  சந்திப்பு

#Meeting
Prathees
2 years ago
சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச - தனியார் துறையினருக்கு இடையில்  சந்திப்பு

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக அரச மற்றும் தனியார் பிரிவு தொழிற்சங்கங்களது ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று .ன்று இடம்பெறவுள்ளது.

இதன்போதுஇ எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தனியார் பிரிவு சேவையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கொழும்பில் ஒன்றுக் கூடி வேதனத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனைகளை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். 18இ000 ஆயிரம் சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக கொடுப்பனவு ஆகியவற்றை வழங்காவிடின் முன்னவித்தலின்றிய வகையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம் என  இலங்கை அரசாங்க உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!