சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Reha
4 years ago
சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்ச்சிக்க அரசாங்க ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  

சமூக வலைத்தளங்களின் மூலம் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் பலர் விமர்ச்சித்து வருவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தடை உத்தரவு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தே அரசாங்கத்திடமிருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அரச சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை பதிவிடுவோருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கும் சுற்றுநிரூபமொன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4