மாவீரர் தினம்:  பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம்  நிராகரிப்பு

#Court Order
Prathees
4 years ago
மாவீரர் தினம்:  பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம்  நிராகரிப்பு

மாவீரர் தினத்துக்குத் தடை விதிக்க கோரி எட்டு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து விடுத்த கோரிக்கையினை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொவிட் - 19 தொற்று உள்ளிட்ட காரணிகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு எதிராகத் தடை பிறப்பிக்கக் கோரி காவல்துறையினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதனை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் காவல்துறையின் குறித்த கோரிக்கையினை நிராகரித்தார்.

அத்துடன் மாவீரர் தினத்துக்குத் தடை விதிக்க கோரி காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையினை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4