பொதுஜன பெரமுனவின்  பிரதேச சபை உறுப்பினரை விளக்கு கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்

#Police
Prathees
4 years ago
பொதுஜன பெரமுனவின்  பிரதேச சபை உறுப்பினரை விளக்கு கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் குடிபோதையில் கல்பத்த பகுதியில் வசிப்பவர்களை துன்புறுத்தியதாக அவரை, அப்பகுதி மக்கள் சிலர் விளக்கு கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

குறித்த பிரதேசசபை உறுப்பினர் மேலும் சிலருடன் கல்பத்த பகுதிக்கு மதுபானம் அருந்துவதற்காக சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்பின்னர் குறித்த  உறுப்பினர் குழுவை விட்டு வெளியேறிய பின்னர், கல்பத்த, பஹுருபொல பிரதேசத்தில் வசிப்பவர்களை துன்புறுத்தும் வகையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர் பிரதேசவாசிகள் அவரை விளக்கு கம்பத்தில் கட்டி வைத்து களுத்துறை (வடக்கு) பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4