பட்ஜெட்டிக்கு ஆதரவாக வாக்களிப்பு: மூன்று எம்.பி.க்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த ரிசாட்

#Budget 2022 #Rishad Bathiudeen
Prathees
4 years ago
பட்ஜெட்டிக்கு ஆதரவாக வாக்களிப்பு: மூன்று எம்.பி.க்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த ரிசாட்

பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அங்கத்தவர் மூவரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று பாராளுமன்றத்தில் வாக்களித்தனர்.

இதன் காரணமாகவே கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அலி சப்ரி ரஹீம், இஷாக் ரகுமான் மற்றும் முஷாரப் முதுபாஜின் ஆகியோர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4