திருகோணமலை கிண்ணியாவில் படகு விபத்து – 6 பேர் பலி (Photos)

Reha
4 years ago
திருகோணமலை கிண்ணியாவில் படகு விபத்து – 6 பேர் பலி (Photos)

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் 6 பேர் வரை உயிரிழந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களிலேயே 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

இன்று காலை, பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இதில் பயணம் செய்த மாணவர்களில் ஏழு பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், காணாமல் போன மாணவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4