எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு முடக்கப்படும் – சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்

Reha
4 years ago
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு முடக்கப்படும் – சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்

நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடப்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் செயற்பாடுகளின் ஊடாகவே, நாட்டை முடக்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நத்தார் பண்டிகை காலப் பகுதியில் நாட்டை முடக்கினால், அது குறித்து ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் கிடையாது எனவும்  பொறுப்பற்றவர்கள், பொறுப்பற்ற விதத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகவும், அது பாரதூரமான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுமதியின்றி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில், முன்னறிவித்தல் இன்றி அதனை ரத்து செய்ய முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4