தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்த மரக்கறிகள்!

Reha
4 years ago
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்த மரக்கறிகள்!

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று அதிகளவு மரக்கறிகள் வந்து சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

நாட்டில் அண்மைக்கால மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு 50 முதல் 60 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்றைய தினம் மலையகத் திலிருந்து கரட், லீக்ஸ், பீற்றூட், கோவா ஆகிய மரக்கறிகள் கிடைத்துள்ளன. சில காய்கறிகளுக்கு அதிக விலை கிடைத்தாலும், அந்த விலைக்கு விற்கப்படாததால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு இன்று கத்தரிக்காய், பயற்றங்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற மரக்கறிகள் கணிசமான அளவில் கிடைத்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலை தூரப் பகுதிகளிலிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமையே விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4