பதவிக்காக அரசின் கால்களைக் கழுவி அரசியல் நடத்தவில்லை! - டக்ளஸுக்கு சிறிதரன் பதிலடி லங்கா4.கொம் / Lanka4.com

Reha
4 years ago
பதவிக்காக அரசின் கால்களைக் கழுவி அரசியல் நடத்தவில்லை! - டக்ளஸுக்கு சிறிதரன் பதிலடி லங்கா4.கொம் / Lanka4.com

"நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்லன். பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னைப் பேசவிடுங்கள்.” - இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

பாராளுமன்றத்தில் இன்று சிறிதரன் எம்.பி. உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிறிதரன் எம்.பியின் உரையை குறுக்கீடு செய்த டக்ளஸ்,

"மஹிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4